இன்னும் சற்று நேரத்தில் சசிகலா டிஸ்சார்ஜ்: சென்னை வருவது எப்போது?

Webdunia
ஞாயிறு, 31 ஜனவரி 2021 (08:07 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆன நிலையில் உடல்நலக் கோளாறு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, சர்க்கரை உள்ளிட்ட நோய்கள் இருந்த நிலையில் அந்த நோய்களுக்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இன்னும் சில மணி நேரங்களில் சசிகலா பெங்களூர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் அவர் பெங்களூரிலேயே ஒருவர் சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார் என்றும் அதன் பிறகு பிப்ரவரி மாதம் முதல் வாரம் அவர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதை அடுத்து பெங்களூரில் அமமுகவினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் செய்துள்ளனர். மேலும் அவர் சென்னை வரும்போது கர்நாடக எல்லையில் அமமுகவினர் மிகச் சிறப்பான வரவேற்பு அவருக்கு கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்