நான் போரை நிறுத்தாவிட்டால் இன்னும் இந்தியா - பாகிஸ்தான் மோதி கொண்டிருப்பார்கள்: டிரம்ப்

Siva

செவ்வாய், 29 ஜூலை 2025 (08:02 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் குறித்து மீண்டும் ஒரு பரபரப்பான கருத்தை வெளியிட்டுள்ளார். "நான் மட்டும் தலையிட்டு போரை நிறுத்தாவிட்டால் இந்தியா - பாகிஸ்தான் இன்னும் மோதிக்கொண்டிருப்பார்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார். 
 
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தின. இந்த மோதலின்போது, பாகிஸ்தான் ராணுவம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தியா தனது தாக்குதலை நிறுத்தியதாகக் கூறப்பட்டது.
 
ஆனால்,  அமெரிக்க அதிபர் டிரம்ப், "நான்தான் இரு நாடுகளுடனும் பேசி போரை நிறுத்தினேன். போரை நிறுத்தாவிட்டால் வர்த்தக உறவுகளைத் துண்டிப்பேன் என்று கூறியவுடன் இரு நாடுகளும் போர் நிறுத்திவிட்டன" என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி, கிட்டத்தட்ட 10 முறைக்கு மேல் "நான்தான் இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்" என்று அவர் கூறியிருந்தார். இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், டிரம்ப் மீண்டும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். "இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களிடம் பேசி நான்தான் போரை நிறுத்தினேன். போரை தொடர்ந்து நடத்தினால் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட மாட்டேன் என்று நான் கூறியதும் இரு நாடுகளும் போர் நிறுத்திவிட்டன. நான் மட்டும் தலையிடாவிட்டால் இன்னும் போர் நடந்துகொண்டிருக்கும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்