சசிகலா அரசியல் நிலைப்பாடு என்ன? எல். முருகன் ஆருடம்!

வெள்ளி, 29 ஜனவரி 2021 (16:03 IST)
சசிகலா அரசியல் நிலைப்பாடு என்பது சசிகலா வந்த பின்னர் அவர் எடுக்கும் முடிவை பொறுத்தே அமையும் என எல். முருகன் பேட்டி. 

 
மதுரையில் நாளை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்துகொள்ள உள்ள பொதுக்கூட்ட நிகழ்விற்கான முன்னேற்பாட்டு பணிகளை ஆய்வு செய்த  மாநில தலைவர் முருகன் மற்றும் தேசிய பொதுச்செயலாளர்  சி.டி.ரவி   தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
 
தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான மதுரையில்  நாளை துவங்க உள்ள பிரச்சாரம் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறும். தேசிய ஜனநாயக கூட்டணி  வலிமையான கூட்டணியாக உள்ளது. 
 
நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட  கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடரும்.  தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்வதாகவே பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து வருகிறார். சசிகலா  அரசியல் நிலைப்பாடு என்பது சசிகலா வந்த பின்னர் அவர் எடுக்கும் முடிவை பொறுத்தே அமையும் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்