நள்ளிரவில் ஜெ. சமாதிக்கு போன சசிகலா: கண்ணீர் விட்டு அழுதாராம்!

Webdunia
சனி, 17 டிசம்பர் 2016 (16:06 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட சமாதியை தினமும் பல ஆயிரம் மக்கள் பார்த்த வண்ணம் உள்ளனர்.


 
 
இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்றதாக தகவல்கள் வருகின்றன.
 
சசிகலாவும், இளவரசியும் எம்ஜிஆர் சமாதி அருகே உள்ள ஜெயலலிதா சமாதிக்கு செல்ல அங்கு நுழைந்தார்கள் அப்போது காவலில் இருந்த காவலர்கள் பதறிப்போய் வணக்கம் வைத்தனர். இருவரும் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் ஜெயலலிதா சமாதி அருகே இருந்துள்ளனர்.
 
ஜெயலலிதா சமாதியில் இளையராஜா இசையில் மெல்லிய சத்தத்தில் ஜெயலலிதா பாடல் ஒலித்துக்கொண்டிருக்க சசிகலா கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். இதனை அறிந்த உயர் அதிகாரிகள் அங்கு வருவதற்குள் சசிகலாவும் இளவரசியும் அங்கிருந்து கிளம்பியதாக தகவல்கள் வருகின்றன.
 
அடுத்த கட்டுரையில்