ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது டீ செலவு 20 லட்சம்!

Webdunia
சனி, 17 டிசம்பர் 2016 (14:14 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 5-ஆம் தேதி இறந்தார். 75 நாட்கள் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவுக்கு 84 கோடி ரூபாய் மருத்துவ செலவு ஆகியுள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் பேசப்படுகிறது.


 
 
ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருந்த நேரத்தில் அங்கே இருந்த அமைச்சர்கள் மற்றும் வெளியே காத்திருந்த பத்திரிகையாளர்கள் என எல்லோருக்கும் அப்பல்லோ மருத்துவமனை கேண்டீனில் இருந்து டீ, பிஸ்கெட், சமோசா போன்றவை வழங்கப்பட்டது.
 
இந்த 75 நாட்களுக்கு டீ, பிஸ்கெட், சமோசா போன்றவை சாப்பிட்ட பில் மட்டும் 20 லட்சம் ரூபாய் வந்திருக்கிறது என தகவல் வந்துள்ளது. இந்த கேண்டீன் செலவான பில் தொகையை இதுவரை யாரும் செட்டில் செய்யவில்லை.
 
அடுத்த கட்டுரையில்