சர்காருக்கு 'செங்கோல்’ பரிசு : உதவி இயக்குநர் வருண்

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (14:49 IST)
பத்து ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய  திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்த செங்கோல் கதையை திருடி சர்கார் படம் எடுக்கப்பட்டுள்ளது என உதவி இயக்குநர் வருண் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதுகுறித்து முருகதாஸ் கருத்து கூறியபோது எனது சொந்த கதை இது. தற்போதைய அரசியல் நிகழ்வுகளை இந்தப்படத்தில் பதிவு செய்துள்ளோம்.அப்படியிருக்க இது எப்படி திருடப்பட்ட கதையாகும் என  பேட்டிகொடுத்திருந்தார் முருகதாஸ்.
 
எழுத்தாளர் ஜெயமோகனும் இந்த கதை 45 நாட்கள் உட்கார்ந்து இரவு பகலாக எழுதினோம் என கூறியிருந்தார்.
 
இந்நிலையில் பலத்த சர்ச்சைகளை கிளப்பிய இவ்விவகாரத்தில் இன்று தீர்வு ஏற்பட்டிருக்கிறது.
 
இயக்குநர் முருகதாஸ் இந்தக்கதை வருணுடையது என பகிரங்கமாக ஒப்புகொண்டதுடன் மூலக்கதிக்கு காரணமான வருணுடைய பெயரும் படத்தின் ஆரம்பத்தில் வரும் என தெரித்தார்.
 
அதனை தொடர்ந்து இவ்விவகாரத்திற்கு வழக்கு தொடுத்திருந்த வருணுக்கு ரூபாய் 30 லட்சம் பணம் கொடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.
 
இதனையடுத்து வருண் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது,சுமுக்கமாக இப்பிரச்சனை பேசித் தீர்க்கப்பட்டுள்ளது.மேலும் எனதுஇந்த செங்கோல் கதையை சர்கார் படத்துகும் விஜய்க்கும், அவரது  குடும்பத்துக்கும்,ரசிகர்களுக்கும் அர்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.
 
சர்கார் பட கதை விவகாரம் தீர்வுகாணப்பட்டுள்ளதால் இனி படம் ரிலீசாவதில் எந்த தடையும் இல்லை என கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்