அமைதிக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிப்பு...

வெள்ளி, 5 அக்டோபர் 2018 (16:00 IST)
ஜெனீவாவிலுள்ள ஸ்டாக்ஹோமில் கடந்த சில நாட்களாக நோபல் பரிசு பெறுபவர்களின் பெயரை நோபல் பரிசுகுழு கமிட்டி அறிவித்து வருகிறது. இந்நிலையில்  அமைதிக்கான நோபல் பரிசும் இரண்டு பேருக்கு அறிவித்துள்ளது.
அதில் கங்கோ நாட்டை சேர்ந்த மருத்துவரான டெனிஸ் முக்வேஜா மற்றும் ஈரானை சேர்ந்த பெண் ஆர்வலரான நாடியா முராத் ஆகியோர் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
 
டெனிஸ் முக்வேஜா
 
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பதில் தன் வாழ்க்கையை அர்பணித்தவர்தான்  மருத்துவரான முக்வேஜா. இவர் பல்லாயிரக் கணக்கான  மக்களுக்கு இலவச சிகிச்சைகளைஅளித்துள்ளார்.
 
 நாடியா முராத்
 
ஐஎஸ் பயங்கரவாதிகளிடமிருந்து தப்பியவர் தான் நாடியா முராத்.இவர் தற்போது சமூக சேவகராக இருக்கிறார். ஐ.எஸ் பயங்கரவாதிகள் பெண்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை உலகத்திற்கு முதலில் இவர் தான் அறிவித்தார்.அதன் பின்பு யாழிடி இனமக்களுக்காக மனித உரிமை ஆர்வலராக பணியாற்றி வருகிறார்.மேலும் பாலியல் அடிமைகளுக்கான  நால்லெண்ண தூதராகாஇ.நா.சபையால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்