சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் இன்றே மூடப்பட வேண்டும் - நீதிமன்றம் அதிரடி

Webdunia
புதன், 12 ஜூலை 2017 (12:59 IST)
நெல்லையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக எழுந்த புகாரில், இன்றே மூடப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் தனது கிளைகளை பரப்பி வருகிறது. இதில், நெல்லையில் கட்டப்பட்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் விதிமுறை மீறி கட்டப்பட்டதாக, நெல்லையை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
 
இதை விசாரித்த நீதிமன்றம், நெல்லையில் செயல்பட்டு வந்த சரவணா ஸ்டோர்ஸ் இன்று மதியம் 2.30 மணிக்குள் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், அந்த கடைக்கு சீல் வைக்க வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டது. 
அடுத்த கட்டுரையில்