செல்லாத ரூபாய் நோட்டுக்களை திருப்பி அளித்த விவகாரம்: சுப்ரீம் கோர்ட் செல்கிறார் சரத்குமார்

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2017 (06:01 IST)
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர்களால் சரத்குமார் காரில் இருந்த ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது இந்த பணத்தை சரத்குமாரிடம் திருப்பி அளிக்க முடிவு செய்தபோது பறிமுதல் செய்த அதே பணத்தை தேர்தல் ஆணையம் திருப்பி அளித்துள்ளது.



 
 
ஆனால் பழைய ரூ.500, ரூ.1000 இப்போது செல்லாது என்பதால் அந்த பணம் தனக்கு தேவையில்லை என்றும், புதிய ரூபாய் நோட்டுக்கள் அல்லது செக், டிடி ஏதாவது ஒன்றை தருமாறு சரத்குமார் கேட்டுள்ளார். ஆனால் இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவிக்கவே சரத்குமார் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
 
இந்த விவகாரம் குறித்து சரத்குமார் சுப்ரீம் கோர்ட்டை அணுகுமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்