தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டது மட்டுமின்றி அவர்களது தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா மரணம் அடைந்த பின்னர் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தவில்லை. எனவே தேர்தல் ஆணையம் தற்போது 19 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதாவது ஒரு மினி பொதுத்தேர்தலை நடத்த வேண்டும்
இந்த நிலையில் தற்போது 98 எம்.எல்.ஏக்களின் ஆதரவை கைவசம் வைத்துள்ள திமுக, இந்த 19 தொகுதிகளிலும் ஒருவேளை வெற்றி பெற்றுவிட்டால் மொத்தம் 117 இடங்களை பெற்றிருக்கும். அப்போது ஆட்சி அமைக்க தேவை ஒரே ஒரு எம்.எல்.ஏ தேவை என்ற நிலையில் கருணாஸ் உள்பட மூவரின் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. எனவே முதல்முறையாக ஸ்டாலின் முதல்வராக ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.