12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - சரத்குமார் எதிர்ப்பு

Webdunia
ஞாயிறு, 6 ஜூன் 2021 (08:08 IST)
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என சரத்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை. 

 
சிபிஎஸ் இ., ஐசிஎஸ் இ ஆகிய பள்ளி அமைப்புகளின் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
 
இதனிடையே இது குறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பின்வருமாறு தெரிவித்துள்ளார், அறிவார்ந்த எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதற்கு தேர்வு நடத்தப்படுவது அவசியம். எனவே, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்