இந்த ஜூஸ் குடித்து வந்தால் போதும்...தொப்பை குறையும்

சனி, 5 ஜூன் 2021 (23:22 IST)
வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பைக் குறைப்பது என்பது மிகவும் கடினம். அதிலும் அனைவருக்குமே தட்டையான மற்றும் அழகான வயிற்றைப் பெற ஆவல் இருக்கும். அடிவயிற்றில் கொழுப்புக்கள் சேர்ந்தால், அதனைக் கரைப்பதற்கு ஏராளமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதில் உடற்பயிற்சிகள், டயட் மட்டுமின்றி, ஜூஸ்களும் உதவும்.
 
 
 
1. ஜூஸ் செய்முறை
 
 
 
தேவையான பொருட்கள்:
 
வெள்ளரிக்காய் - 1
எலுமிச்சை - 2
புதினா - சிறிது
துருவிய இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
 
 
செய்யும் முறை:
 
முதலில் வெள்ளரிக்காயை அரைத்து, அதில் எலுமிச்சைகளை பிழிந்து புதினாவை பொடியாக நறுக்கி சேர்த்து, இஞ்சியையும்  உடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தினமும் காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும். இப்படி தினமும்  செய்து வரும் போது, 15 நாட்களிலேயே உங்கள் தொப்பையில் ஓர் நல்ல மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள்.
 
2. ஜூஸ் செய்முறை
 
தேவையான பொருட்கள்:
 
பூண்டு - 3 பற்கள்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை - 1
வெதுவெதுப்பான நீர் - தேவையான அளவு
 
 
 
செய்யும் முறை:
 
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையின் சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் பூண்டு பற்களை வாயில்  போட்டு மென்று விழுங்கிய பின், இந்த ஜூஸைக் குடிக்க வேண்டும். ஒருவேளை உங்களால் பூண்டு பற்களை சாப்பிட முடியாவிட்டால், அதனை தட்டி ஜூஸ் உடன் சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்