’வெடிக்கும் சர்ச்சை’ - சரத்குமார், ராதாரவி நடிகர் சங்கத்திலிருந்து நீக்கம்!

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2016 (05:57 IST)
சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது.


 
 
கூட்டத்தின் முடிவில் மூன்று நடிகர்களை சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவர் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை அதிரடியாக நீக்கியுள்ளனர். இவர்கள் மூவரும் நடிகர் சங்கத்தில் ஊழலில் ஈடுப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நடிகர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. 
 
மேலும், சரத்குமார் நடிகர் சங்க தலைவராக இருந்த போது, ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதுகுறித்த கேள்விகளுக்கு இன்னும் அவர்கள் தரப்பில் இருந்து தெளிவான பதில் தராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.  
 
மேலும், காவிரி பிரச்சனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஆதரவு அளிப்பது, கன்னட நடிகர்களின் பேச்சுக்கு கண்டனம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்டது.

இதில் பொதுச்செயலாளர் விஷால், துணை தலைவர் பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்