சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது இன்னொரு வழக்கு: மீண்டும் கைது செய்த போலீசார்..!

Siva
வெள்ளி, 20 டிசம்பர் 2024 (07:41 IST)
நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை என பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், தற்போது புதிய வழக்கில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்ட திட்டம் குறித்து அவதூறு பரப்பியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், இந்த புகாரின் அடிப்படையில் தான் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே பெண் போலீசாரை அவதூறாக பேசியது உள்பட பல வழக்குகள் சவுக்கு சங்கர் மேல் இருக்கும் நிலையில், அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெற்று விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், தற்போது பிடிவாரண்ட் காரணமாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது இன்னொரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கிலும் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்