காவல்துறையினரின் உதவியுடன் மணல் திருட்டு ..பகீர் குற்றச்சாட்டு

Webdunia
வெள்ளி, 28 ஜூன் 2019 (21:21 IST)
நிலத்தடி நீர் மட்டம் உயர்த்துவது குறித்தும், பிளாஸ்டிக் பைகளை கட்டுப்படுத்தும் வழிகள் குறித்தும் இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள 157 பஞ்சாயத்துகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. 
இந்த கூட்டத்தினையொட்டி கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நெரூர் தென்பாகம் கிராம சபைக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டங்களில் தமிழகம் முழுவதும் மக்கள் நீதிமைய தலைவர் கமலஹாசன் நிர்வாகிகளை கலந்து கொள்ளுமாறு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்ததையடுத்து, கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் தென்பாகம் பகுதியில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில், மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு முழுக்க, முழுக்க இரவு நேரத்தில் மணல் திருடுவதாகவும், இதை கண்டிக்க வேண்டிய காவல்துறையினரின் உதவியுடனே அ.தி.மு.க மற்றும் தி.மு.க வினர் துணையோடு மணல் திருட்டு நடைபெறுவதாக புகார், எழுந்தது.
 
இந்நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் நீதிமையம் கட்சி நிர்வாகிகள் மோகன்ராஜ், கார்த்திகேயன், ரவிந்தீரன், கல்யாண்குமார், தனிகாச்சலம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியையொட்டி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, மக்கள் நீதிமையம் அரவக்குறிச்சி தொகுதியின் வேட்பாளரும், நிர்வாகியுமான மோகன்ராஜூம், கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதை மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்ட இந்த கூட்டத்திலேயே அந்த பெண்மணி ஒருவர் இதை அம்பலப்படுத்தியதாகவும், மாவட்ட ஆட்சியரும் தீவிர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்