ஆசை ஆசையாய் புதுவீட்டில் குடிபுகுந்த குடும்பம்: தீயில் கருகி குடும்பமே பலியான அதிர்ச்சி சம்பவம்

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (07:53 IST)
ஆசையாசையாய் புது வீடு கட்டி அதில் குடிபுகுந்த குடும்பம், தீ விபத்தில் மொத்தமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
சேலம் அருகே மர அரவை ஆலை உரிமையாளர் கார்த்திக் என்பவர் கடந்த ஆண்டு ஆசை ஆசையாக புது வீடு கட்டி சமீபத்தில்தான் அந்த வீட்டில் குடியேறினார். அவருடைய வீட்டில் அவருடைய குடும்பத்தினரும் மற்றும் உறவினர்களும் தங்கியிருந்தனர் 
 
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென புதுவீட்டில் தீபிடித்தது. இந்த தீவிபத்தில் கார்த்திக் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 5 பேர் பரிதாபமாக தீயில் சிக்கி பலியாகினர். மேலும் அவருடைய உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். உறவினர் சிலருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் 
 
இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று தீ விபத்திலிருந்து தப்பியவர்களுக்கு கூட தெரியவில்லை. இதுகுறித்து தீயணைப்பு துறையினர் விசாரணை செய்ததில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. புதிய வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்து வருகிறார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்