ஏடிஎம் கோளாறு; கோவில் வாசலில் பிச்சை எடுத்த ரஷ்யர்: வைரல் புகைப்படம்!!
செவ்வாய், 10 அக்டோபர் 2017 (20:14 IST)
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு, தற்போது பிச்சையும் எடுக்க வைக்கிறது. ஆம், தமிழ்நாட்டை சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டவர் பிச்சை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த இவாஞ்சலின் என்பவர் தமிழ்நாட்டை சுற்றிப்பார்க்க கடந்த 24 ஆம் தேதி இந்தியா வந்துள்ளார். இதையடுத்து சென்னையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு சென்றுள்ளார்.
காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களை சுற்றி பார்த்து முடித்த அவர் மீண்டும் சென்னை திரும்புவதற்கு ஏடிஎம்-ல் பணம் எடுக்க சென்றுள்ளார். ஆனால், பல முறை முயற்சித்தும் ஏடிஎம்-ல் அவரால் பணம் எடுக்க முடியவில்லை.
அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக உங்களது ஏடிஎம் ரகசிய குறியீடு முடக்கப்பட்டுவிட்டதாக குறுந்தகவலே வந்தது. இதனால், வேறு வழியின்றி பணத்திற்காக கோவில் வாசலில் பிச்சை எடுக்க துவங்கியுள்ளார்.
இந்த தகவல் போலீஸாருக்கு கிடைக்க, அங்கு விரைந்த அவர்கள் அந்த ரஷ்யரின் ஆவணங்களை சரிபார்த்து பின்னர் அவர்களே பணம் கொடுத்து ரஷ்யரை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.