அமைச்சர் தொகுதியில் காற்றில் பறந்த விதிமுறைகள்

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (00:15 IST)
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தொகுதியில் காற்றில் பறந்த விதிமுறைகள் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை உபயோகித்து குடும்பம் தமிழக முதல்வர் பிறந்த தின கொண்டாட்ட பொதுக்கூட்டம்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் அவர்களுடைய 69வது பிறந்த தினம், நேற்று திமுக சார்பில் தமிழக அளவில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவினை தொடர்ந்து மாலை முதல்வர் முக ஸ்டாலின் பிறந்த தின பொதுக்கூட்டம் எழுச்சியுரை என்று கரூர் மாவட்ட திமுக சார்பில் 80 அடி சாலையில் நடத்தப்படவுள்ளது.

குரானா காலகட்டம் என்பதால் எங்கேயும் பொதுக்கூட்டம் நடத்த கூடாது என்று அந்த விதிகள் நாளை முதல் நீக்கப்படுவது எடுத்து இன்று கரூர் மாவட்ட திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு அதற்காக செங்குந்தபுரம் மற்றும் காமராஜபுரம் மேற்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழக அரசின் மின்சார வாரிய துறைக்கு சொந்தமான மின்கம்பங்களில், கூம்பு வடிவ ஒலி பெருக்கி கட்டப்பட்டு ஒலியின் அளவு அதிகப் படுத்தப்பட்ட, டெக்ஸ்டைல்,  தனியார் பள்ளி, வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, ஆங்காங்கே கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அரசாணையை மீறுவது சட்டப்படி குற்றம், அதிலும் குரானா விதிகள் நாளை முதல் தளர்த்தப்பட்டு பொதுக்கூட்டம் நாளை முதல் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பு உள்ள நிலையில் முன்கூட்டியே இன்று திமுக சார்பில் நாஞ்சில் சம்பத் கலந்துகொள்ளும் எழுச்சியுரை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்