கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு ரூ.1132 கோடி ஒதுக்கீடு

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (21:11 IST)
கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு ரூ.1132 கோடி ஒதுக்கீடு
தமிழக முதல்வராக கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் தற்போது கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு ரூபாய் 1132 கோடி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து கோவை பகுதி மக்கள் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர் 
 
கோவை விமான நிலையத்தின் ஓடுபாதைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களுக்கு இந்த பணத்தில் இருந்து இழப்பீடு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது
 
ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்ட போது நிலத்தின் உரிமையாளர்களுக்கு நான்கு கட்டங்களாக ரூபாய் 308 கோடி இழப்பீடு வழங்கப்பட்டு இருந்தது. நிலம் வழங்கிய மற்றவர்களுக்கும் இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியர் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் இந்த தொகை தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்