தக்காளி விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் நேற்று பத்து ரூபாய் உயர்ந்த தக்காளி விலை இன்று ஒரே நாளில் 30 ரூபாய் உயர்ந்துள்ளதை அடுத்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று தக்காளியின் வரத்து குறைந்துள்ளதை அடுத்து ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய் என விற்பனையான நிலையில் இன்று 30 ரூபாய் அதிகரித்து 140 என விற்பனையாகி வருகிறது.
சில்லறை விலையாக 150 முதல் 160 வரை விற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட் ஆயிரம் டன் வரை தினமும் தக்காளி வரத்து இருக்கும் நிலையில் இன்று வெறும் 400 டன் மட்டுமே வந்ததால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதே ரீதியில் சென்றால் தக்காளி ஒரு கிலோ 200 ரூபாய் தொட்டு விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது