ஆவின் பொருட்களின் விலை திடீர் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

செவ்வாய், 25 ஜூலை 2023 (11:56 IST)
ஏற்கனவே அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களும் பால் உள்பட பல பொருள்களின் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியில் உள்ளனர் 
 
இந்த நிலையில் ஆவின் ருள்களின் விலை உயர்ந்துள்ளது என்றும் இன்று முதல் புதிய விலை அமலுக்கு வந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் தான் பால் விலை உயர்த்தப்பட்டது என்பதும்  ஆரஞ்சு பால்  ஒரு லிட்டர் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஆவின் பொருள்களான  பன்னீர் மற்றும் பாதாம் மிக்ஸ் ஆகியவையும் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இன்று முதல் இதன் புதிய விலைகளின் பட்டியல் இதோ
 
✦ பன்னீர் 1 கி.கி - ரூ.550
 
✦ பன்னீர் 1/2 கி.கி - ரூ. 300
 
✦ பன்னீர் 200 கி - ரூ.120
 
✦ பாதாம் மிக்ஸ் 200 கிராம் - ரூ.120
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்