ரூ.1000 உதவித்தொகை திட்டம்: நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்!

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (08:55 IST)
தமிழக அரசு சமீபத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தை அறிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த திட்டத்தின்படி மாணவிகள் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது
 
உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால் மாணவிகள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
அரசு பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி படிக்க மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இளநிலைப் பட்டப் படிப்புக்கு மட்டுமே இந்த உதவித் தொகை கிடைக்கும் என்பதும் முதுநிலை பட்டப்படிப்பு கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்