அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்: இன்று முதல் தொடக்கம்!

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (07:45 IST)
அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
 
 அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரிகள் பொறியியல் மருத்துவம் சட்டம் போன்ற உயர்கல்வி படிக்கும் போது அவர்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் அறிவித்தார்
 
இந்த உதவித்தொகை மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் இந்த திட்டத்திற்கு தகுதியான மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி அதாவது இன்று இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து நடைபெறும் விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த திட்டத்தின்படி சுமார் 90 ஆயிரம் மாணவிகள் பயன்பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்