கணவர் செல்வமணியுடன் சென்று விஜயவிஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்திய ரோஜா

Siva
ஞாயிறு, 7 ஜனவரி 2024 (19:01 IST)
நடிகை ரோஜா மற்றும் அவரது கணவர் செல்வமணி விஜயகாந்த் இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார்.
 
நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை ரோஜா மற்றும் அவரது கணவர் செல்வமணி ஆகியோர்  விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று பிரேமலதா உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 
 
அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, "விஜயகாந்த் எல்லோரிடமும் அன்புடன் பழகுவார். அவரது மறைவு எங்களுக்கு பேரிழப்பு. விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.
 
 முன்னதாக நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா தனது கணவருடன் கலைஞர் 100 விழாவில் கலந்து கொண்டார் என்பதும் அவருக்கு முன் வரிசையில் இருக்கை அமைக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்