இந்நிலையில் தங்களது கூட்டணிக்கு வருமாறு மக்கள் நீதி மய்யம் கட்சி தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் விஜயகாந்த், பிரேமலதாவை சந்திக்கவுள்ளதாக மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் பொன்ராஜ் தகவல் கூறியதற்கு பதில் அளித்துள்ள விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், அரசியலில் நாங்கள் தான் சீனியர் அதனால் தெய்வத்துடன் மக்களுடன் மட்டும்தான் கூட்டணி. எனவே நாங்கள் தனித்தே 234 தொகுதியிலும் போட்டியிடுவோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.