தினகரனுக்கு விழுந்த ஓட்டுகளுக்கு சின்னம்மாதான் காரணமாம்!

Webdunia
ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (15:52 IST)
சின்னம்மா அவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு சான்றுதான் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் என இளவரசி மகள் கிருஷ்ணபிரியா தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

 
ஆர்.கே.நகரில் ஆர்.கே.நகரில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 14வது கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவில் தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதவிட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சின்னம்மா அவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு சான்றுதான் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் என குறிப்பிட்டுள்ளார்.
 
சசிகலாவை மனதில் வைத்துதான் ஆர்.கே.நகர் மக்கள் தினகரனுக்கு வாக்கு அளித்தார்கள் என உறுதியாக சொல்ல முடியாது. ஆளும் கட்சி மீதான அதிருப்தி ஒருபக்கம். அதை தினகரன் நன்றாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட்டார். தனக்கு கிடைத்த குக்கர் சின்னத்தை மக்கள் மனதில் வேகமாக நீங்காத ஒரு இடத்திற்கு சென்றார். 
 
டிடிவி தினகரன் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ள நிலையில், இப்போதே சசிகலா புகழ் பாட தொடங்கிவிட்டனர் ஒரு குழுவினர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்