ஆர்.கே.நகர் அப்டேட்; வாக்கு எண்ணும் மையத்தில் மோதல்

ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (09:41 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணும் மையத்தில் முகர்களுக்கிடையே மோதல் எழுந்ததால் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 
ஆர்.கே.நகரில் கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆர்.கே.நகரில் உள்ள 2,28, 234 வேட்பாளர்களில் 1, 76,885 வாக்குகள் பதிவானது.  அதாவது 77 சதவீத வாக்குகள் பதிவானது. 
 
இந்நிலையில், சென்னை இராணி கல்லூரியில், இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 14 மேஜைகளில் மொத்தம் 19 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. இதில், டிடிவி தினகரன் முன்னணியில் இருக்கிறார். 
 
இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில்  டிடிவி தினகரன் மற்றும் அதிமுக முகவர்கள்  இருவருக்குமிடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. முகவர்கள் மோதிக்கொள்ளும் சூழல் எழுந்ததால், அவர்களை போலீசார் வெளியேற்றினர். 
 
இதன் காரணமாக வாக்கு எண்ணிக்கை சுமார் 45 நிமிடங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் வாக்கு எண்ணும் மையத்திற்குள் துணை ராணுவம் நுழைந்து நிலைமைய சரி செய்தது. அதன் பின் மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்