ஆளுநருக்கு எதிரான தீர்மானம் இன்று சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நிலையில் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் இரண்டு எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். முன்னதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ பன்னீர்செல்வம் அவர்களை நீக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஆளுநர் ரவி செயல்படுவதாக கூறி திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் இன்று ஆளுனறூக்கு எதிராக தீர்மானம் இயற்றப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட நிலையில் பாஜகவின் 2 எம்எல்ஏக்கள் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகிய இருவரும் சட்டமன்றத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்பாகவே அதிமுக வெளிநடப்பு செய்தது என்பதால் இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது