சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் அளவுக்கு திறமை இல்லாத மாவட்ட செயலாளர்களை நீக்க தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதையடுத்து, மாவட்ட செயலாளர்கள் மறு சீரமைப்பு பணியை ஆதவ் அர்ஜுனாவிடம் ஒப்படைக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நியமிக்கப்பட்ட தவெக மாவட்ட செயலாளர்களில் சிலர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், ஒரு சிலர் அரசியலுக்கு புதியவர்கள் என்பதால், தேர்தலை சந்திக்கும் அளவுக்கு திறன் இல்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திறம்பட செயல்படாத மாவட்ட செயலாளர்களின் பட்டியல் தயாரிக்க ஆதவ் அர்ஜுனாவிடம் பணியை விஜய் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில், மாவட்ட செயலாளராக தகுதி இல்லாதவர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் விஜய் அதற்கான அறிக்கையை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து, சில மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட்டு, புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என கூறப்படுவதால் தமிழக வெற்றி கழக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.