நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சியில் ஒரு சில அரசியல் பிரபலங்கள் தற்போது இணைந்து வருகின்றனர். விரைவில் இன்னும் சில பிரபலங்கள் இணைவார்கள் என்றும் அதேபோல் திரையுலகில் உள்ள சில பிரபலங்களும் அவருடைய கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நேற்றிரவு நேற்றைய நண்பரும், இன்றைய தவெக தலைவருமான திரு விஜய் அவர்களுடனான ஊடலான உரையாடல் , பஜ்ஜியுடன் தேனீர் ருசித்தல், வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் இப்படி விடிய விடிய நீண்ட சுவாரஸ்ய நிகழ்வுகள். சரி அதை பதிவு செய்ய ஒரு selfie எடுத்துக்கொள்ளலாமே எனப் பார்த்தால் …..
அது கனவு!