தடையில் இருந்து தளர்வுகளுக்கு அடாப்ட் ஆகும் நகரங்கள்!!

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (10:32 IST)
மாநிலத்தில் ஊரடங்கு முறை குறித்து தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
 
தமிழகத்தில் கொரோனா தொற்றுகள் 1 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்தது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகியவற்றில் கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து பகுதிகளும் மூடப்பட்டன.
 
தற்போது ஊஅரடங்கு குறித்து தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 
 
1. மாநிலத்தில் உள்ள கோயில்கள், வழிப்பாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி கிடையாது. 
2. கூட்டங்கள், பேரணிகள் நடத்த அனுமதி கிடையாது. 
3. மத ரீதியான கூட்டங்களுக்கும் இந்த தடை பொருந்தும்.
4. சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள மால்கள் உள்ளிட்ட வணிக வளாகங்கள் திறக்க அனுமதி கிடையாது. 
5. பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் திறக்க அனுமதி இல்லை.
6. கல்விக்கு எந்த தடையும் இல்லை. அதாவது ஆன்லைன் முறை கல்விக்கு அரசு ஆதரவு அளிக்கும். 
7. மத்திய அரசு அனுமதிக்காத சர்வதேச விமானச் சேவைகளுக்குத் தடை தொடரும்.
8. சினிமா தியேட்டர்கள், ஹோட்டல்கள், ரயில் சேவைகள், நீச்சல் குளங்கள், டாஸ்மாக் பார்கள் திறக்கக் கூடாது. 
9. விளையாட்டு அரங்குகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்காமல், திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.
10. மாநிலங்களுக்கு இடையே ஆன போக்குவரத்திற்கு ஜூலை 15 ஆம் தேதி வரை தடை. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்