இன்று முதல் இயல்பு நிலைக்கு திரும்புகிறது சென்னை: ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்

திங்கள், 6 ஜூலை 2020 (07:31 IST)
இன்று முதல் இயல்பு நிலைக்கு திரும்புகிறது சென்னை
கொரோனா வைரஸ் காரணமாக ஜூலை 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்தாலும் சென்னையில் ஜூலை 5 வரை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஜூலை 6 முதல் அதாவது இன்று முதல் ஒருசில தளர்வுகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதால் சென்னை இன்று முதல் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்புகிறது
 
ஊரடங்கு தளர்வுகள் காரணமாக இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை சென்னையில் உணவகங்கள் காலை 6.00 மணி முதல்‌ இரவு 9.00 மணி வரை இயங்கலாம் என்றும் ஆனால் பார்சல்‌ சேவை மட்டும்‌ அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆன்லைன் உணவு நிறுவனங்கள். காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மட்டும்‌ உணவுகளை வழங்கும் சேவை செய்யலாம்.
 
தேநீர்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 6.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும் என்பதும் பார்சல் மட்டுமே அனுமதி என்பதும் குறிப்பிடத்தக்கது‌ மேலும். காய்கறி கடைகள்‌ மற்றும்‌ மளிகைக்கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 6.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்‌.
 
மால்கள் தவிர மற்ற வணிக வளாகங்கள்‌, ஜவுளி, நகைக்கடைகள், ஷோரூம்கள்‌ ஆகியவை காலை 10.00 மணி முதல்‌ மாலை 6.00 மணி வரை செயல்படலாம்‌. இதுபோன்ற தளர்வுகளால் இன்று முதல் சென்னை மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்