சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

Siva
ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (19:11 IST)
சென்னையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடந்த நிலையில், இந்த நிகழ்ச்சி உலகிலேயே அதிகமாக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என்ற சாதனை படைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் சுமார் 15 லட்சம் பேர் கலந்து கொண்டதாகவும், இந்த சாதனை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

உலகின் அதிகப்படியான பார்வையாளர்கள் கண்டு ரசித்த நிகழ்ச்சி என்ற பெருமை சென்னை விமான சாகச நிகழ்ச்சிக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி, சண்டிகர் உள்ளிட்ட பல நகரங்களில் வான் சாகச கண்காட்சி நடந்திருந்தாலும், இந்த அளவுக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை இல்லை என்றும், சென்னையில்தான் மிக அதிக அளவில் பார்வையாளர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள் என்றும் தலைமை தளபதி கூறியதாக தகவல் உள்ளது.

சென்னை மெரினா மட்டும் இன்றி, கோவளம் முதல் எண்ணூர் வரை உள்ள கடற்கரைகளில், மொட்டை மாடியில் இருந்து ஏராளமானோர் இந்த காட்சியை ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்