12ஆம் வகுப்பு மாணவர்களின் நலனுக்காகவே 11ஆம் பொதுத்தேர்வு ரத்து: அமைச்சர் அன்பில் மகேஷ்

Mahendran

வெள்ளி, 15 ஆகஸ்ட் 2025 (15:35 IST)
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் நோக்கில், பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். 
 
மாணவர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத் தேர்வுகள் எழுதுவது, அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும், இது அவர்களது கற்றல் திறனைப் பாதிக்கும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். 
 
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு பிளஸ் 1 பாடங்கள் ஒரு அடித்தளமாக இருக்க வேண்டுமே தவிர, அதுவே மாணவர்களுக்கு மன அழுத்தமாக மாறிவிடக் கூடாது என்பதே இந்த முடிவிற்கான முக்கியக் காரணம் என்று அவர் கூறினார். 
 
மேலும், பிளஸ் 1 பாடங்கள் மிகவும் முக்கியமானவை என்பதால், அவற்றை முழுமையாக பள்ளிகளில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த பாடங்களை நன்றாகப் படித்தாலே போட்டி தேர்வுகளில் எளிதாக வெற்றி பெற முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்