தமிழகம் முழுவதும் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத் தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது X (ட்விட்டர்) பக்கத்தில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, கடந்த ஆண்டை போலவே பொதுத் தேர்வு கால அட்டவணை அக்டோபரில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பள்ளிக் கல்வித்துறையின் 2025-26ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் அடங்கிய பக்கங்களை இணைத்துள்ளதாகவும், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தன்னம்பிக்கையோடு தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.