பாஜகவில் இணைந்த நடிகை கஸ்தூரி, பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து.. வரவேற்று பேசிய நயினார் நாகேந்திரன்..!

Mahendran

வெள்ளி, 15 ஆகஸ்ட் 2025 (13:46 IST)
நடிகை கஸ்தூரி மற்றும் பிக் பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து ஆகியோர் இன்று சென்னையில் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் இருவரும் தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டனர்.
 
அரசியல் கருத்துக்களை பரபரப்பாக பேசும் நடிகை கஸ்தூரி 'ஆத்தா உன் கோவிலிலே' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிப் படங்களில் நடித்துள்ளார். 51 வயதான அவர், சினிமா தாண்டி, அரசியல் மற்றும் சமூகப் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து தனது கருத்துகளைத் தெரிவித்து வந்தார். 
 
எந்த அரசியல் கட்சியையும் சாராமல், சமூக வலைத்தளங்கள் மூலம் மக்கள் பிரச்னைகளுக்காக பேசியதால், அவர் பல வழக்குகளையும் சந்தித்திருக்கிறார். இந்த நிலையில் இன்று அவர் பாஜகவில் இணைந்தார்.
 
அதேபோல்  பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சமூக செயற்பாட்டாளர் நமீதா மாரிமுத்துவும் பா.ஜ.க.வில் இணைந்தார். இருவரையும் பா.ஜ.க.வுக்கு வரவேற்று பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், இவர்கள் இணைந்தது கட்சிக்கு மேலும் பலம் சேர்க்கும் என்று தெரிவித்தார். 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்