நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய மனிதன் – முகம் சுழிக்க வைக்கும் காரணம் !

Webdunia
வெள்ளி, 29 நவம்பர் 2019 (08:49 IST)
சென்னை கொடுங்கையூரில் நள்ளிரவில் நிர்வாணமாக ஓடி பீதியைக் கிளப்பிய மனிதனை பொதுமக்கள் துரத்திப் பிடித்துள்ளனர்.

சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலை, காந்தி நகர் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இளைஞர் ஒருவர், நிர்வாணமாக ஓட அவரைப் பின்னாலேயே நாய்களும் சில மனிதர்களும் துரத்திக் கொண்டு ஓடும் சிசிடிவி வீடியோக் காட்சிகளும் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பின.

அவரைப் பிடித்து மக்கள் விசாரித்ததில் முகம் சுழிக்கவைக்கும் காரணம் ஒன்றை சொல்லியுள்ளார். தனது கள்ளக்காதலி வீட்டில் உல்லாசமாக இருக்க அவர் வந்துள்ளார். அப்போது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க காதலியனின் கணவன்தான் வந்துவிட்டார் என நினைத்து பின்வாசல் பக்கமாக ஓடியுள்ளார். அப்போது பதற்றத்தில் ஆடைகளை எடுக்காமல் ஓடிவந்ததுள்ளார். இதனையடுத்து அவரை எச்சரித்து மக்கள் அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்