ஆரஞ்சு பால் பாக்கெட் விலை மட்டும் உயர்வு ஏன்??

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (12:31 IST)
பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆவினின் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலை உயர்வு குறித்து பேட்டியளித்துள்ளார்.


ஆவினின் ப்ரீமியம் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு ரூ.12 உயர்த்துவதாக ஆவின் அறிவித்துள்ளது. இதனால் ஆவின் ஆரஞ்சு நிற ப்ரீமியம் கொழுப்புசத்து நிறைந்த பால் பாக்கெட் ஒரு லிட்டரின் விலை ரூ.60 ஆக உயர்ந்துள்ளது.

ஆனால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூ.46க்கு விலை மாற்றமின்றி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அட்டைதாரர்களாக இல்லாத மற்ற வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் அதிக கொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு நிற பாக்கெட் பாலை கமர்சியல் பயன்பாட்டுக்கு முழுமையாக தான் இந்த பால் பயன்படுத்தப்படுகிறது. எனவே ரூ.48-ல் இருந்து ரூ.60 ஆக விலையை மாற்றி அமைத்துள்ளோம்.

மற்றபடி மக்கள் பயன்படுத்தும் நீல நிற மற்றும் பச்சை நிற பாக்கெட் பால் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. தனியார் பால் பாக்கெட் விலையுடன் ஒப்பிடும் போது ஆவினில் ரூ.10 குறைவாகவே விற்கபப்டுகிறது என தெரிவித்துள்ளார்.

Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்