மக்களே உஷார்: இந்த 6 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு!

வியாழன், 3 நவம்பர் 2022 (14:05 IST)
இன்று 6 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், ஒடிசா உள்ளிட்ட வங்க கடலோர மாநிலங்கள் வடகிழக்கு பருவமழையால் அதிக மழைப்பொழிவை பெறுகின்றன. வங்க கடலில் உருவாகும் புயல்கள் கரை கடக்கும் போது ஆண்டுதோறும் சேதங்களும் ஏற்படுகிறது. 

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக நேற்று 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த 6 மாவட்டங்களை தவிர்த்து செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்