தமிழக புதிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி: பரபரப்பு பின்னணி!!!

Webdunia
ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (09:54 IST)
தமிழக புதிய காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டதற்கு பல முக்கிய பின்னணிகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர்  திடீரென நீக்கப்பட்டு அந்த பதவிக்கு கே.எஸ். அழகிரியை நியமித்து கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்களாக வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அழகிரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் நெருங்கிய ஆதரவாளராவார். 
இந்த திடீர் மாற்றத்திற்கு முக்கிய காரணம் திமுகவிற்கும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசருக்கும் இடையே சுமூக உறவு இல்லததே காரணம் என கூறப்படுகிறது. காங்கிரஸ், திமுக ஆர்ப்பாட்டங்களுக்கு இவ்விரு கட்சி நிர்வாகிகளுக்கிடையே ஒத்துழையாமை இருந்து வந்துள்ளது.
 
இந்த நிலைமை நீடித்தால் நாடாளுமன்ற தேர்தலில் சிக்கலாகிவிடும் என்றும், தொகுதி பங்கீட்டில் பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும் எனவும் புகார்கள் கட்சி மேலிடத்திற்கு சென்றது. இதனால் திருநாவுக்கரசரை நீக்கிவிட்டு கே.எஸ். அழகிரியை நியமித்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்