ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணைக்கு தயார்: அப்பல்லோ பிரதாப் ரெட்டி அதிரடி!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2017 (13:17 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். இந்நிலையில் அவரது மரணம் குறித்த விசாரணையை சந்திக்க தயாராக உள்ளதாக அப்பல்லோ பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.


 
 
கடந்த செப்டம்பர் மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். இந்த 75 நாட்களும் ஜெயலலிதா எந்தவித வெளியுலக தொடர்பும் இல்லாமல் இருந்தார்.
 
மேலும் ஜெயலலிதாவை சந்திக்க ஆளுநர் உள்ளிட்ட யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவரது சிகிச்சை குறித்து எந்த வெளிப்படைத்தன்மையும் இருக்கவில்லை. மொத்தமும் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனால் ஜெயலலிதாவின் மரணம் ஒரு மர்மமாகவே இருந்தது.
 
இதனால் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. அவரது மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வந்தவாறே உள்ளது. இந்த சூழலில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தினால் அதனை சந்திக்க தயாராக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.
 
ஜெயலலிதாவின் மரணத்தில் அப்பல்லோ மருத்துவமனைக்கும் தொடர்பு உள்ளது என பல தகவல்கள் பரவின. இந்நிலையில் தற்போது பேட்டியளித்துள்ள பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவின் சிகிச்சை தரும் போது அதில் யாரும் தலையிடவில்லை. அவர்து சிகிச்சையில் எந்த தவறும் நடக்கவில்லை. அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தினால் அதனை சந்திக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்