சென்னை பூங்காக்களில் வாசிப்பு மையம்.. மாநகராட்சியின் ஸ்பெஷல் அறிவிப்பு..!

Mahendran
வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (09:53 IST)
பொதுமக்கள் மத்தியில் வாசிப்பு திறனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக சென்னை மாநகராட்சி சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி சென்னையில் உள்ள பூங்காக்களில் வாசிப்பு மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் முதல் கட்டமாக மே தின பூங்காவில் வாசிப்பு மையம் அமைக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 
 
சென்னையில் உள்ள பூங்காக்களில் பலர் ஓய்வு எடுக்கவும் உடற்பயிற்சி செய்யவும் வரும் நிலையில் அவர்களுக்கு மேலும் ஒரு பொழுதுபோக்காக வாசிப்பு மையம் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 
 
பொதுமக்கள் மத்தியில தற்போது வாசிப்பு பழக்கம் குறைந்து கொண்டே வரும் நிலையில் பூங்காக்களில் நேரம் செலவிடுபவர்கள் இந்த வாசிப்பு மையத்தில் உள்ள புத்தகங்களை எடுத்து படிக்கலாம் என்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த வாசிப்பு மையங்களுக்கு புத்தகங்களை நன்கொடையாக வழங்கலாம் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 
 
பொதுமக்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க சென்னை மாநகராட்சி எடுத்து உள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்