சென்னை மழை நீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை: மாநகராட்சி திட்டம்!

புதன், 3 ஜனவரி 2024 (08:21 IST)
சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட சென்னை மாநகராட்சிக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
 சமீபத்தில் சென்னையில் பெய்த பெரிதாக கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் மழை நீர் வடிகால் அமைத்தும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது எப்படி என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பிய நிலையில் இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது 
 
சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வடிகால் பணிகளுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது? எந்தெந்த நிதிகளின் கீழ் பணிகள் நடைபெற்றுள்ளது? பணிகள் நிறைவடைய எவ்வளவு காலமாகும்? மற்றும் வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணம்? என்ன போன்ற தகவல்கள்  விரிவாக  தயார் செய்யப்பட்டு வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் வெள்ளை அறிக்கை வெளியாகும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்