கருத்து கணிப்பு அல்ல.. கருத்து திணிப்பு.. அதிமுக 25 தொகுதிகளில் வெற்றி பெறும்: ஆர்பி உதயகுமார்..!

Mahendran
திங்கள், 3 ஜூன் 2024 (16:07 IST)
நேற்று முன்தினம் வெளியானது கருத்து கணிப்பு அல்ல என்றும் கருத்து திணிப்பு என்றும் கூறிய முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தமிழகத்தில் அதிமுக 25 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 
பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியான கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் திமுக 36 முதல் 39 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று பல ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன. 
 
குறிப்பாக அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லாமல் போகலாம் என்றும் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது அதிமுக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த நிலையில் கருத்துக்கணிப்பு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்புதான் நடக்கிறது என்றும் தமிழகத்தில் அதிமுக 25 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளார். அவரது நம்பிக்கையை சரியாக இருக்குமா என்பதை நாளை வரை பொறுத்து இருந்து பார்ப்போம். 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்