இந்த நிலையில் இந்த கருத்துக்கணிப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் ராகுல் காந்தி இதுகுறித்து கூறுகையில், இது மோடியின் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு என்றும் இது மோடியின் கற்பனைக்கு கணிப்பு என்றும் காட்டமாக பேசி உள்ளார்
மேலும் இந்தியா கூட்டணி 295 இடங்களில் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இன்னும் இரண்டு நாள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நாள் இருக்கும் நிலையில் ராகுல் காந்தியின் கணிப்பு சரியா? அல்லது ஊடகங்களின் கணிப்பு சரியா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.