சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, ரவீந்திரநாத் எம்.பி. கடிதம்!!

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (16:20 IST)
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, ரவீந்திரநாத் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். 


அதிமுக ஒற்றை தலைமை குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் நடந்து வந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து அதிமுகவின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்படுவதாக ஈபிஎஸ் அறிவித்தார். இந்த நீக்கப்பட்ட உறுப்பினர்களில் ஓபிஎஸ் மகனும், ராஜ்யசபா எம்.பியுமான ஓ.பி.ரவீந்திரநாத்தும் ஒருவர்.

இந்நிலையில் மாநிலங்களவைக்கு கடிதம் எழுதியுள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுகவிலிருந்து மாநிலங்களவை எம்.பியாக உள்ள ஓ.பி.ரவீந்திரநாத் நீக்கப்பட்டுள்ளார். எனவே இனி அவர் மாநிலங்களவையில் அதிமுக எம்.பியாக கருதப்படக்கூடாது என்றும் அதில் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இதற்கு விளக்கமளித்து ஓ.பி,ரவீந்திரநாத் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அதிமுக தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை நிராகரிக்க வேண்டும். என்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்