பட்னாவிஸை வாழ்த்திய எடப்பாடியார்! தாக்கிய ராமதாஸ்!

Webdunia
சனி, 23 நவம்பர் 2019 (13:02 IST)
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைந்தது சந்தர்ப்பவாத அரசியல் என ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜக திடீரென ஆட்சியமைத்தது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்க தேசியவாத காங்கிரஸிலிருந்து வெளியேறிய அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்திருக்க, அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவோ தாக்கும் வகையில் பதிவிட்டுள்ளது. மகாராஷ்டிர அரசியல் குறித்து தனது ட்விட்டரில் தெரிவித்துள்ள ராமதாஸ் ” மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவுடன் இணைந்து ஆட்சியமைத்தது பாரதிய ஜனதா. காலை நாளிதழ் செய்திகளில் சிவசேனா ஆட்சி. காலை தொலைக்காட்சி செய்திகளில் பாஜக ஆட்சி. மராட்டியத்தில் சந்தர்ப்பவாத அரசியல் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி!” என்று கூறியுள்ளார்.

தன்னோடு கூட்டணியில் இருக்கும் மற்றொரு கட்சியின் வெற்றி குறித்து ராமதாஸ் இப்படி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்