இந்தியாவில் 834 பேருக்கு கொரோனா: கைமீறி செல்கிறதா நிலவரம்?
சனி, 28 மார்ச் 2020 (08:14 IST)
இந்தியவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான உயிர் பலிகளை ஏற்படுத்திய கொரோனா தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று வரை இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் 19 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருந்தாலும், ஊரடங்கு மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த போதாது, மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.