ஏற்கனவே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவரும், மதுரையைச் சேர்ந்த ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின் குணமாகிய நிலையில் தற்போது சென்னையிலும் ஒருவர் குணமாகி இருப்பது பொதுமக்களுக்கும் கொரோனா நோயாளிகளுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது
கடந்த சில நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் இரத்தப் பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதால் அவர் முற்றிலும் குணமாகி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர் டிஸ்சார்ஜ்க்கு பிறகு பதினான்கு நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்துதலை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸில் இருந்து முற்றிலுமாக சென்னை இளைஞர் ஒருவர் குணமாகி இருப்பது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் ஏற்கனவே கொரோனா பயத்தில் இருக்கும் பொது மக்களுக்கு இது போன்ற செய்திகள் நம்பிக்கையை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது