அட ஓவரா புதிர் போடாம பதிலை சொல்லுங்கப்பு! – ராமதாஸ் பதிலை எதிர்பார்த்து நெட்டிசன்ஸ்!

Webdunia
புதன், 27 மே 2020 (11:31 IST)
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி குறிப்பிட்ட அரசியல் தலைவர் பெயரை சொல்லி அவரை நம்ப வேண்டாம் என கூறியதாக ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று தனது ட்விட்டரில் பதிவிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் “திமுக தலைவர் கலைஞரும், நானும் அவரது இல்லத்தில் ஒரு நாள் தனியாக உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு மூத்த அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிட்ட கலைஞர், அவரை மட்டும் எந்த காலத்திலும் நம்பி விடாதீர்கள் என்று கூறினார். அவர் யார் என்பதை உங்களின் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பலரும் பலவிதமான யூகங்களில் பல அரசியல் தலைவர்களின் பெயரை கூறி வந்தனர். எனினும் அந்த அரசியல்வாதி யார் என ராமதாஸே கூறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிருக்கு சிறு க்ளூ கொடுக்கும் விதமாக மீண்டும் ட்வீட் செய்துள்ளார் ராமதாஸ்

அந்த பதிவில் ” இந்த பதிவுக்கான பின்னூட்டத்தில் பலரும் பல தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால், கலைஞர் குறிப்பிட்டது அதிமுக, திமுக, திக, மதிமுக, தேமுதிக, பாஜ௧, காங்கிரஸ், பொதுவுடைமை இயக்கங்கள், விசிக, ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பெயர்களையோ, மறைந்த தலைவர்களின் பெயர்களையோ அல்ல!” என்று கூறியுள்ளார்.

இதனால் பலர் இவ்வளவு பேரும் இல்லாவிட்டால் வடநாட்டு அரசியல்வாதிகளாக இருக்குமோ என சிந்தனைகளை பறக்கவிட்டுள்ளனர். நாளைக்கு இந்த புதிருக்கு அவரே பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்